காலாவதியான உணவுகளை விற்ற 400 கடைகளுக்கு ஆப்பு!

காலாவதியான உணவுகளை விற்ற 400 கடைகளுக்கு ஆப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில், 400க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் முதலாம் திகதி முதல் 12ஆம் திகதி வரை சுமார் 2,000 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன்போது 12,000க்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அச்சங்கத்தின் பிரதான செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்தார்.

சுகாதாரத்திற்குப் புறம்பான முறையில் உணவுகளை விற்பனை செய்தமை மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழேயே இந்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான விசேட சுற்றிவளைப்புகள் எதிர்வரும் வசாக் மற்றும் பொசன் பண்டிகைக் காலங்களை முன்னிட்டும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.