சர்வதேச முதலீட்டாளர்களுக்காக மத்தள விமான நிலையம் திறப்பு

சர்வதேச முதலீட்டாளர்களுக்காக மத்தள விமான நிலையம் திறப்பு

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து சார்ந்த முதலீட்டு வாய்ப்புகளை மேற்கொள்வதற்காக அழைப்பு விடுத்துள்ளது.

சர்வதேச முதலீட்டாளர்களுக்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு இந்த அழைப்பை விடுத்துள்ளது.

இதற்கான விருப்பங்களை வெளிப்படுத்தும் ஆவணங்களை  சமர்ப்பிக்குமாறு உலகளாவிய ரீதியில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.