உடல் எடையை குறைக்க உதவும் கம்பு ரொட்டி.., எப்படி செய்வது?
கம்பில் உடலிற்கு நன்மைகள் வழங்கும் பொட்டாசியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
அன்றாடம் கம்பை நம் உணவில் சேர்த்துக்கொள்வதால் நம் உடல் எடை குறையும் மற்றும் உடல் நன்கு வலுபெறும்.
அந்தவகையில், ஆரோக்கியம் நிறைந்த கம்பு ரொட்டி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கம்பு மாவு- 1 கப்
- வெங்காயம்- 1
- பச்சைமிளகாய்- 2
- கறிவேப்பிலை- 1 கொத்து
- கொத்தமல்லி- சிறிதளவு
- பூண்டு- 5 பல்
- சீரகம்- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கலந்துகொள்ளவும்.
பின் இதில் சீரகம், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிணைந்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு தவா வைத்து சூடானதும் அதில் கலந்த மாவை வட்டமாக தட்டுக்கொள்ளவும்.
இறுதியாக இதனை சுற்றி எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுத்தால் சத்தான கம்பு ரொட்டி தயார்.