ஹோர்முஸ் நீரிணையை கடக்கும் கப்பல்களுக்கு ஈரானின் முக்கிய அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணையை கடக்கும் கப்பல்களுக்கு ஈரானின் முக்கிய அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணையை கடக்கும் வணிகக் கப்பல்களுக்குப் புதிய சேவைக் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று சீனாவுக்கான ஈரான் தூதுவர் அப்டோல்ரெசா ரஹ்மானி ஃபாஸ்லி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா இந்த யோசனையை முற்றிலுமாக நிராகரித்துள்ள போதிலும், ஈரான் தனது முடிவில் உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தங்களுக்குக் கடினமான காலங்களில் உறுதுணையாக இருந்த நட்பு நாடுகளுக்கு இதில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும் என்றும் தூதுவர் உறுதியளித்துள்ளார்.

 

அமெரிக்கா ஈரான் ஒப்பந்தம்

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக எட்டப்பட்ட ஆரம்பகட்ட ஒப்பந்தத்தின்படி, வர்த்தகக் கப்பல்கள் 60 நாட்களுக்கு எவ்விதக் கட்டணமும் இன்றி இந்த நீரிணையை கடக்கலாம் என்று விதிகள் வகுக்கப்பட்டிருந்தன.

ஹோர்முஸ் நீரிணையை கடக்கும் கப்பல்களுக்கு ஈரானின் முக்கிய அறிவிப்பு | Friendly Nations Special Hormuz Fee Treatment

ஆனால், அந்த 60 நாட்களுக்குப் பிறகு என்ன நடைமுறை பின்பற்றப்படும் என்பதில் இன்னும் தெளிவற்ற சூழல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது.