யாழில். விபத்து - முதியவர் உயிரிழப்பு

யாழில். விபத்து - முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் 80 வயதுடைய முதியவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

மாதகல் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த சில்லாலையை சேர்ந்த நபரும் , சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில் , சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.