கச்சா எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி

கச்சா எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று (3)சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளன. 

​இதற்கமைய, ப்ரெண்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.67 அமெரிக்க டொலராகவும், டபிள்யூ.டி.ஐ ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.27 அமெரிக்க டொலராகவும் விற்பனை செய்யப்படுகின்றன. 

​ஈரானுடன் புதிய பேச்சுவார்த்தைகள் இன்று தொடங்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த நிலையில் இவ்வாறு விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளன. 

​எவ்வாறாயினும் மேர்பன் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.6 சதவீத அதிகரிப்புடன் 85.49 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.