அதிகாலையில் கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட ஐவர் பலி

அதிகாலையில் கோர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட ஐவர் பலி

மொனராகலை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்த்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

குறித்த விபத்து இன்று அதிகாலை (21) மணியளவில் மொனராகலை - கும்புக்கன பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மொனராகலை ,கும்புக்கன பகுதியில், கெபிலித்த ஆலயத்திற்கு புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த குழுவினரை ஏற்றிச் சென்ற டிராக்டர் சுற்றுலா வாகனம் மீது டிப்பர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

 

மேலதிக விசாரணை

இந்நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட ஐவர் இந்த விபத்தில் உயிரிழந்தனர். மேலும் மூவர் கவலைக்கிடமான நிலையில் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடம்கஸ்லந்த, புத்தல மற்றும் ஹொரபொக்க பகுதிகளைச் சேர்ந்த, 21,26,31,55 மற்றும் 56 வயதுடையவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்திற்குள்ளான டிப்பர் லொறி சாரதி மற்றும் பயணிகளை ஏற்றி வந்த உழவு இயந்திர சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.