7 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலிகள் திருட்டு: நால்வர் அதிரடியாக கைது

7 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலிகள் திருட்டு: நால்வர் அதிரடியாக கைது

அம்பாறை மற்றும் உகன காவல் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் தங்கச் சங்கிலி திருட்டு சம்பவத்தில் முக்கிய சந்தேக நபர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் இந்த கைது நடவடிக்கையை மேறகொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த ஜூலை மாதம் ஏசல பௌர்ணமி தினத்தன்று அம்பாறையிலுள்ள கொண்டுவட்டுவான் குளத்திற்கு அருகே பயணித்த பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி திருடப்பட்டிருந்தது.

 

தங்கச் சங்கிலி

அதனைத் தொடர்ந்து, கடந்த ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி உகன பகுதியில் மற்றொரு பெண்ணின் தங்கச் சங்கிலியும் இதே பாணியில் கொள்ளையடிக்கப்பட்டது.

இச்சம்பவங்கள் குறித்து அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய விரிவான விசாரணைகளில் சங்கிலித் திருட்டில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபர் குற்றச் செயல்களின் பின்னர் கொழும்பு - கடுவெல பகுதிக்குத் தப்பிச் சென்று அங்கு பேருந்து சாரதியாகப் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.

7 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலிகள் திருட்டு: நால்வர் அதிரடியாக கைது | 4 Arrested In Ampara Gold Chain Theft

இந்நிலையில், குறித்த சந்தேக நபர் திங்கட்கிழமை (12-10-2026) அம்பாறைப் பகுதிக்குத் திரும்பியதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அம்பாறை இன் விடுதிக்கு அருகில் வைத்துப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இதைடுத்து, கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில் திருடப்பட்ட சங்கிலிகளை விற்பனை செய்வதற்கு இடைத்தரகராகச் செயற்பட்ட அம்பாறை நகரிலுள்ள தங்கக் கடை ஊழியரொருவர் கைது செய்யப்பட்டார்.

 

சட்ட நடவடிக்கை

அவரிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், திருடப்பட்ட இரண்டு சங்கிலிகளும் கல்முனையிலுள்ள பிரபல தங்கக் கடையொன்றிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை அம்பலமானது.

அதற்கமைய, உடனடியாகச் செயற்பட்ட காவல்துறையினர் கல்முனைத் தங்கக் கடைக்குச் சென்று அங்கிருந்து உருக்கப்பட்ட நிலையிலிருந்த இரண்டு சங்கிலிகளையும் கைப்பற்றியதுடன் அக்கடையில் பணிபுரிந்த இருவரையும் கைது செய்தனர்.

7 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலிகள் திருட்டு: நால்வர் அதிரடியாக கைது | 4 Arrested In Ampara Gold Chain Theft

கைப்பற்றப்பட்ட தங்க நகைகளின் சந்தைப் பெறுமதி சுமார் ஏழு இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.