A9 வீதியின் அக்குறணை பகுதியில் பாரிய விபத்து! பலர் பலி

A9 வீதியின் அக்குறணை பகுதியில் பாரிய விபத்து! பலர் பலி

புதிய இணைப்பு 

அக்குறணை பகுதியில் சற்று நேரத்திற்கு முன்பு இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.

அக்குறணையில் உள்ள குருகொட பகுதிக்கு அருகே, சென்றுகொண்டிருந்த பல வாகனங்கள் மீது சீமெந்து கலவையை ஏற்றி சென்ற கனரக வாகனம் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 

மீட்பு நடவடிக்கை

விபத்தில் பாதிக்கப்பட்ட இருவர சிறப்பு சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

A9 வீதியின் அக்குறணை பகுதியில் பாரிய விபத்து! பலர் பலி | Major Accident In Akurana

 

விபத்தைத் தொடர்ந்து அவசர சேவைகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A9 வீதியின் அக்குறணை பகுதியில் பாரிய விபத்து! பலர் பலி | Major Accident In Akurana

A9 வீதியின் அக்குறணை பகுதியில் பாரிய விபத்து! பலர் பலி | Major Accident In Akurana

 

முதலாம் இணைப்பு 

அக்குறணையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்து! பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்   

கண்டி - யாழ்ப்பாணம் A9 பிரதான வீதியின் அக்குறணை பகுதியில் பாரிய விபத்து ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த விபத்து சற்றுமுன்னர் பதிவாகியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று பற்றி எரிந்துள்ளதுடன் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் பல வர்த்தக நிலையங்களும் பகுதியளவில் சேதமாகியுள்ளன.

 

இதன் காரணமாக கண்டி - மாத்தளை பாதையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery