இன்றைய ராசி பலன் 20 அக்டோபர் 2026
மேஷம் ராசி பலன்
![]()
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று கர்ம ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் உங்களுடைய வேலையில் முன்னேற்றத்தையும், இலாபத்திற்கான வாய்ப்புகளை தரும். இன்று உங்கள் தந்தை வழி உறவினர்களிடம் இருந்து ஆதரவு கிடைக்கும். இன்றைய பொழுது இனிமையானதாகவும், சுவையான உணவுகளை உண்டு மகிழ வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கலாம். குடும்ப பிறப்புகளை சரியான நேரத்தில் முடிக்க முடியும். மேலும் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்ற முயல்வீர்கள்.
ரிஷபம் ராசி பலன்
![]()
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சந்திரனின் நகர்வு உங்களுடைய குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்கும். ஆறாம் வீட்டில் மூன்று கிரகங்களின் சேர்க்கை, உங்கள் வேலை, தொழில் தொடர்பாக புதிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும். எதிரிகள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது குழந்தைகளின் உடல் நலன் மீது கவனம் செலுத்த வேண்டிய நாள். எந்தவித வாக்குவாதங்களையும் தவிர்க்க வேண்டிய நாள்.
மிதுனம் ராசி பலன்
![]()
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யக்கூடிய காரணத்தால், இன்று நாள் முழுவதும் உங்கள் செயல்பாடுகளிலும், செலவுகள் தொடர்பாக கவனமாக இருக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம். குடும்ப வாழ்க்கையில் உங்கள் துணைக்கு உதவுவதற்கான நல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீக நடவடிக்கைகளில் பங்கேற்க விருப்பப்படுவீர்கள். இன்று உங்கள் சொல், செயல்களில் நிதானத்தை கடைப்பிடிப்பதால் நற்பெயர் கிடைக்கும்.
கடகம் ராசி பலன்
![]()
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு இனிமையான மற்றும் மகிழ்ச்சியான நாளாக அமையும். சப்தமஸ்தானத்தில் சந்திரனின் சஞ்சாரம், உங்கள் ராசியில் குரு மற்றும் செவ்வாயின் சேர்க்கை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடியதாக அமையும். நிதி ஆதாயங்கள் கொண்டு வரக்கூடிய நாள். நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். வியாபாரகூட்டாளிகளின் யோசனை மூலம் பயனடைவீர்கள். குடும்ப வாழ்க்கையில் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்களுக்கு பிடித்தவர்களுக்கு பரிசு பொருள் வாங்கி தர நினைப்பீர்கள்.
சிம்மம் ராசி பலன்
![]()
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் தேவையற்ற செலவுகளை செய்ய நேரிடலாம். அதனால் எந்த ஒரு செலவுகளையும் நிதானத்துடன், யோசித்து செய்யவும். முக்கிய வேலைகளை செய்வது அல்லது திட்டமிடுவதில் இன்று ஆர்வம் காட்டுவீர்கள். உடல்நலனில் சிறிய தொய்வு இருக்கும். குழந்தைகள் மற்றும் குடும்ப தேவைகளுக்காக புதிய முதலீடுகள் செய்ய திட்டமிடுவீர்கள். இன்று உங்கள் உறவினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும். முடிந்தவரை கருத்து வேறுபாடுகளை தவிர்க்கவும். உங்கள் தந்தையின் ஆசிர்வாதமும் ஆதரவும் கிடைக்கும்.
கன்னி ராசி பலன்
![]()
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய நிதி விஷயங்களில் லாபகரமான நாளாக இருக்கும். பண பரிவர்த்தனைகளை கவனமாக செய்யவும். வியாபாரத்தில் லாபம் ஏற்றுவதற்கான நல்ல வாய்ப்புகள் இருக்கும். இன்று மாலை நேரம் இனிமையான நேரமாக அமையும். சில மங்களகரமான நிகழ்வுகள், ஆன்மீக செயல்களில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.பணியிடத்தில் முன்னேற்றத்தை காண்பீர்கள். சில புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். நண்பர்களை சந்திக்கவும், அவர்களுடன் நேரம் செலவிடவும் வாய்ப்பு கிடைக்கும்.
துலாம் ராசி பலன்
![]()
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசியில் மூன்று கிரகங்களின் சேர்க்கை பல விதத்தில் நல்ல பலன்களை தரக்கூடியதாக இருக்கும். நீங்கள் செய்யக்கூடிய தொழிலில் முன்னேற்றமும், உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவையும் பெறுவார்கள். பணியிடத்தில் உங்களுடைய வேலைகள் சமூகமாக நடைபெறும். உங்களுடைய பொழுதுபோக்கு மற்றும் மகிழ்ச்சிகரமான செயல்களுக்காக பணம் செலவிடுவீர்கள்.இன்று குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். சுவையான உணவு உண்டு மகிழும் வாய்ப்பு பெருவீர்கள்.
விருச்சிகம் ராசி பலன்
![]()
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டியது இருக்கும். அதே சமயம் எந்தவித ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது, முடிவுகளை தவிர்க்கவும். இன்று நீங்கள் மேற்கொள்ள கூடிய பயணங்கள் நல்ல பலனை தரும். குறிப்பாக நாளின் பிற்பகுதியில், உங்களுடைய உணர்ச்சியின் வேகத்தையும், கோபத்தையும் கட்டுப்படுத்துங்கள். உங்கள் குடும்ப வாழ்க்கையில் உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். நெருங்கிய உறவினர்களை சந்திக்க வாய்ப்பு உண்டு. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்கிறீர்கள்.
தனுசு ராசி பலன்
![]()
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் மூன்று கிரகங்களின் சேர்க்கை, பலவிதத்தில் முன்னேற்றத்தை தரக்கூடியதாக இருக்கும். வியாபாரம் செய்யக்கூடியவர்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் பெறுவார்கள். மேலும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். குடும்ப வாழ்க்கையில், அன்புக்குரியவர்களுடன் இனிமையாக நேரம் செலவிட முடியும். உங்கள் பெற்றோரிடம் இருந்து சில மகிழ்ச்சிகரமான செய்திகள் கிடைக்கும். தொண்டுப் பணிகளில் ஆர்வத்துடன் பங்கேற்ப்பீர்கள்.
மகரம் ராசி பலன்
![]()
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மங்களகரமான, பயனுள்ள நாளாக அமையும். தொழில் தொடர்பாக வருமானம் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் சக ஊழியர்களிடமிருந்து முழு ஆதரவு கிடைக்கும். வண்டி வாகன சேர்க்கை உண்டு. பெற்றோரிடமிருந்து அன்பையும், ஆசிர்வாதத்தையும் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியாக, இனிமையாக பொழுது கழிப்பீர்கள். அவர்களுடன் மனதிற்கு பிடித்த பயணம் செல்ல வாய்ப்பு உண்டு.இன்று உங்களுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேற காண்பீர்கள்.
கும்பம் ராசி பலன்
![]()
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் உங்கள் வேலை தொடர்பாக நிதானத்தை கடைபிடிக்கவும். மேலும் உங்களுடைய திட்டமிடல் அவசியம். அவசர முடிவுகள் தொந்தரவு தர வாய்ப்புகள் உண்டு. இன்று சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். அதே சமயம் நீங்கள் கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்கவும். இது தேவையற்ற வாக்குவாதங்களை ஏற்படுத்தலாம். உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாகவும், உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்கும். காதல் உறவில் நல்லிணக்கம் ஏற்படும். உங்கள் துணைக்காக நேரம் செலவிட முயலவும்.
மீனம் ராசி பலன்
![]()
மீன ராசி அன்பர்களுக்கு இன்று மங்களகரமான நாளாக அமையும். வேலையில் சாதகமான சூழ்நிலை நிலவும். உங்களுடைய வீட்டின் தேவைக்காக, சில கட்டுமான செயல்படுவதற்காக செலவுகள் ஏற்படலாம். உங்கள் பிள்ளைகளிடமிருந்து மகிழ்ச்சியான சில செய்திகள் கிடைக்கும். குடும்ப பெரியவர்களின் ஆசிர்வாதமும், ஆதரவும் கிடைக்கும். மேலும் சில மங்களகரமான நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். உங்கள் மாமியார் வீட்டாரின் மூலம் சில நன்மைகள் தேடி வரும். உங்கள் வீட்டின் சூழ்நிலை மேம்படக்கூடிய நாள்.