யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள்
யாழ்ப்பாணம், 273, ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலத்திலும் அதன் வளாகத்திலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் பல மணி நேரம் தீவிர தேடுதல் நடவடிக்கையில் நேற்று (19) ஈடுபட்டனர்.
இந்நிலையில், யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி, ஸ்ரீதர் தியட்டரைத் தொடர்ந்து இன்று ஊர்காவற்றுறையில் உள்ள ஈ.பி.டி.பி முகாம் குருமடம் சோதனையிடப்படுகின்றது.
கொழும்பில் இருந்து வருகை தந்த விசேட குற்றப் புலனாய்வு அணியினரே இந்த சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனை நடவடிக்கைகள்
நீதிமன்ற அனுமதிகளைப் பெற்று அந்த உத்தரவின் பெயரில் இச் சோதனை நடவடிக்கைகள் தொடர்கின்றன.
இவ்வாறு இடம்பெறும் சோதனைகள் எந்த முறைப்பாட்டின் அடிப்படையில் இடம்பெறுகின்றது என உடனடியாகத் தெரிய வராதபோதும் ஈ.பி.டி.பியினருக்கு எதிராக கடந்த காலங்களில் பல முறைப்பாடுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.