மறு அறிவிப்பு வரை கடற்றொழில், கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்
வங்கக்கடலின் ஆழமான பகுதிகளில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடிப் படகுகள் மற்றும் கடல்சார் சமூகத்தினருக்காக வளிமண்டலவியல் திணைக்கத்தினால் எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, வடக்கு அகலாங்கு 10 மற்றும் 20 இற்கும், கிழக்கு தீர்க்காங்கு 80 மற்றும் 95 இற்கும் இடைப்பட்ட கடல் பிரதேசங்களில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் த தவிர்க்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
குறித்த கடல் பிரதேசங்களில் தற்போது மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தரப்பினரை பாதுகாப்பான கடற்பரப்புகளை நோக்கிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் அறிவித்தல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும் மீன்பிடி மற்றும் கடல்சார் சமூகத்தினரிடம் கோரப்பட்டுள்ளது.
வடக்கு அந்தமான் தீவுகள் மற்றும் அதனை அட்டிய வங்கக்கடல் கடல் பகுதியில் உருவான குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இந்த தொகுதியானது இன்று (25) வங்கக்கடலின் கிழக்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு கடல் பகுதிகள் ஊடாக நகர்ந்து, ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தொகுதியானது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 26 ஆம் திகதி காலை வேனையில் புலயலாகவும், ஒக்டோபர் 27 ஆம் திகதி காலை வேளையில் மேற்கு-மத்திய வங்கக்கடல் கடல் பகுதிக்கு அருகில் தீவிர புயலாகவும் மேலும் தீவிரமடைவதற்கான உயர் சாத்தியம் உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நாட்டைச் சூழவுள்ள கடல் பிரதேசங்களின் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன், அதன் வேகம் மணித்தியாலத்துக்கு 30 - 40 கிலோமீற்றர் வரை இருக்கக்கூடும்.
திருகோணமலை முதல் காங்கேசன்துறை, புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளுக்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 - 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கடல் கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடல் கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பால் உள்ளகடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 - 2.5 மீற்றர் வரை உயரக்கூடும் எனவும் முன்னறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அக் கடற்பரப்புகளில் தற்காலிகமாக மணித்தியாலத்துக்கு 60 - 70 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடுவதுடன், அந்வேளைகளில் கடற்பரப்புகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.