இலத்தீன் அமெரிக்காவை விரட்டும் கொரோனா- நாளாந்தம் 86 ஆயிரம் தொற்றாளர்கள் அடையாளம்

இலத்தீன் அமெரிக்காவை விரட்டும் கொரோனா- நாளாந்தம் 86 ஆயிரம் தொற்றாளர்கள் அடையாளம்

இலத்தீன் அமெரிக்க வலயத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 6 மில்லியனைக் கடந்துள்ளது.

குறித்த வலயத்தில் அதிகளவான பாதிப்புக்களை கொண்ட முதல் நாடாக அமெரிக்கா காணப்படும் அதேவேளை, அதற்கு அடுத்ததாக பிரேசில் பதிவாகியுள்ளது.

இதற்கு அடுத்ததாக பேரு மற்றும் சிலி ஆகிய நாடுகள் முறையே மூன்று மற்றும் நான்காம் இடங்களில் காணப்படுகின்றன.

இந்நிலையில் குறித்த வலயத்தில் கொரோன தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 5 மில்லியனில் இருந்து 6 மில்லியனை கடப்பதற்கு வெறும் 11 நாட்களே சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இலத்தீன் அமெரிக்க வலயத்தில் நாளாந்தம் சுமார் 86 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் அதேவேளை, இங்கு கடந்த ஒரு வாரத்தில் 2600 மரணங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.