13ஆவது திருத்தம் தொடர்பில் காலம் கடந்து வெளியான தகவல்!

13ஆவது திருத்தம் தொடர்பில் காலம் கடந்து வெளியான தகவல்!

13ஆவது திருத்தம் ஒரு வார காலத்துக்குள் உருவாக்கப்பட்டதென அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கண்டியில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

குறுகிய காலத்துக்குள் உருவாக்கப்படும் அரசமைப்பு திருத்தங்கள் பலவீனமானவையாகவே காணப்படும்.

மாகாண சபைகளுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்து தெளிவான கரிசனைகள் உள்ளன. எதிர்வரும் காலங்களில் இது குறித்த கரிசனைகள் எழுப்பப்படும்.

சி.வி விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரை மூலம் இது புலனாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.