புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

ஸ்ரீலங்காவின் 9 ஆவது நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு நாளை மற்றும் நாளை மறுதினமும் இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக்க தசாநாயக்க அறிக்கை ஒன்றை விடுத்து இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பிலேயே இந்த செயலமர்வு இடம்பெறவுள்ளதாகவும் அதில் அனைத்து புதிய உறுப்பினர்களையும் கலந்து கொள்ளுமாறும் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் இந்த செயலமர்வில் பிரதம விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 ஆம் 26 ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை நாடாளுமன்ற தெரிவுக்குழு முதலாம் இலக்க அறையில் இந்த செயலமர்வு இடம்பெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.