முதற்தர போட்டிகளில் 1000 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட லஹிரு உதார
இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் உள்ளூர் முதற்தர போட்டித் தொடரில் NCC அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லஹிரு உதார முதற்தர போட்டிகளில் 1000 ஓட்டங்களைக் கடந்துள்ளார்.
இவர் இதுவரை 9 போட்டிகளில் பங்கேற்று மொத்தமாக 1,039 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதோடு, இவர் 86.58 என்ற துடுப்பாட்ட சராசரியை கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இவர் 3 சதங்கள் மற்றும் 6 அரைச்சதங்கள் உள்ளடங்களாக இந்த ஓட்ட எண்ணக்கையை பெற்றுள்ளார். ராகம CC அணிக்கெதிராக இவர் 290 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
இவர் நுகேகொடை சென்.ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவராவர். இவரது இந்த சாதனையை சக வீரர்களுடன் இவ்வாறு கொண்டாடினார்.