தனிமைப்படுத்தல் நிலையத்தில் மோதல் - ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

தனிமைப்படுத்தல் நிலையத்தில் மோதல் - ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

தனிமைப்படுத்தல் நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராஜகிரிய ஆயுர்வேத வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையத்திலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜப்பான் நாட்டில் இருந்து தாயகம் திரும்பிய இரண்டு குழுக்களுக்கு இடையிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட மதுவை அருந்திய பின்னர் இந்த மோதல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அவரது உடல்நிலை மோசமாக இல்லை என்று வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.