ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகவுள்ள ரணில் விக்ரமசிங்க

ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகவுள்ள ரணில் விக்ரமசிங்க

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறை பிரிவில் இன்று (31) முன்னிலையாகவுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் குறித்த ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 21ஆம் திகதி முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறை பிரிவு அழைப்பு விடுத்திருந்த நிலையில், குறித்த தினத்தில் தனக்கு முன்னிலையாக முடியாது என ரணில் விக்ரமசிங்க ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தார்.

மேலும், ஒகஸ்ட் 31ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருகைத் தருவதாகவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.