பணிப்புறக்கணிப்பை கைவிட்ட புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம்

பணிப்புறக்கணிப்பை கைவிட்ட புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம்

சீன தயாரிப்பிலான தரமற்ற புகையிரத பெட்டிகளைக் கொண்ட ரயில் சேவைகளில் இருந்து விலகுவதற்கு புகையிரத இயந்திர சாரதிகள் மேற்கொண்டிருந்த தீர்மானத்தை கைவிட்டுள்ளனர்.

புகையிரத பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்தே இந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது.

நாட்டில் சீன தயாரிப்பிலான 100 இரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படுவதாகவும், அவை தரமற்றது எனவும் ரயில்வே எஞ்சின் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்தியக தொடங்கொட தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.