அரைக் கம்பத்திற்கு இறக்கப்பட்ட இந்திய தேசியக் கொடி
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 7 நாட்கள் அரசு துர்க்கம் அனுசரிக்கும் என்றும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரணாப் முகர்ஜி ஆகஸ்ட் 10ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
மேலும், குடியரசுத் தலைவர் பொறுப்பிலிருந்தவர் என்பதால், அவரின் பிரிவையொட்டி நாட்டில் 7 நாள் துர்க்கம் அனுசரிக்கப்படும் என்றும் எந்தவிதமான கொண்டாட்டங்களும் குறிப்பிட்ட நாட்களில் முன்னெடுக்கப்படாது என்றும் இந்திய அரசு அறிவித்துள்ளது.