சிறைச்சாலைக்குள் தனிமைப்படுத்தலில் இருந்த பெண்ணொருவர் தப்பியோட்டம்

சிறைச்சாலைக்குள் தனிமைப்படுத்தலில் இருந்த பெண்ணொருவர் தப்பியோட்டம்

களுத்துறை-வடக்கு சிரிலந்த சிறைச்சாலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஹெரோயின் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பெண்ணொருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

48 வயதுடைய குறித்த பெண் தப்பிச் சென்றதைத் தொடர்ந்து அவரைத் கண்டறிவது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, 100 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் நபரொருவர் வெலிபென்ன-லத்தூவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சிப்பாய் ஒருவர் நேற்று (08) வெலிபென்ன-லெவ்வந்துவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.