ரணிலுக்கு தெரிந்த அந்த இரகசியம் -வெளிப்படுத்திய அமைச்சர்

ரணிலுக்கு தெரிந்த அந்த இரகசியம் -வெளிப்படுத்திய அமைச்சர்

பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவை வலுவானவராக்குவதற்காகவே 19வது திருத்தம் கொண்டுவரப்பட்டது . தன்னால் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாக வரமுடியாது என்பது விக்கிரமசிங்கவுக்கு தெரியும் இதன் காரணமாக அவர் தன்னை அதிகாரம் மிக்கவராக மாற்றவேண்டியிருந்தது என என மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

20வது திருத்தத்தின் மீதான நாடாளுமன்ற விவாதம் ஆரம்பமானதும் ஐக்கியமக்கள் சக்தியிலிருந்து எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் பக்கம் வருவார்கள் என்பது தெரியவரும்.

முன்னாள் ஜனாதிபதி ஜேஆர்ஜெயவர்த்தனவே 1978 இல் மிகவும் வலுவான ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்தினார். தற்போதைய எதிர்க்கட்சி தலைவரின் தந்தையும் அந்த நிறைவேற்று அதிகார முறையை அனுபவித்தார்.

19வது திருத்தத்திற்கு ஆதரவாக நானும் வாக்களித்தேன் என்பது உண்மை , நல்லாட்சி அரசாங்கம் 20வது திருத்தத்தை கொண்டுவருவதாக உறுதியளித்ததன் காரணமாகவே நான் வாக்களித்தேன் ஆனால் அந்த வாக்குறுதி காப்பாற்றப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.