சிறைச்சாலைகளில் தொடரும் பதற்றம் : யாழ் சிறையில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு!

சிறைச்சாலைகளில் தொடரும் பதற்றம் : யாழ் சிறையில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு!

யாழ்ப்பாணச் சிறையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் அமைதியின்மை ஏற்பட்டதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய அதன்படி, யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படை தளபதி மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன யாழ்ப்பாணச் சிறைச்சாலைக்குள் கள ஆய்வு மேற்கொண்டார்.

குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்

மேலும், யாழ் சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்புப் பணிகளுக்காகப் பல இராணுவ வீரர்களும், காவல்துறையினரும் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலைகளில் தொடரும் பதற்றம் : யாழ் சிறையில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு! | Security Has Been Strengthened At Jaffna Prison

அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பிரதி காவல்துறை மா அதிபர் (DIG), மாவட்டத்திற்கான சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SSP), மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பல காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் சிறைச்சாலைக்கு வரவழைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சிறையிலிருந்து கன உலோகப் பொருட்களையும் தளபாடங்களையும் அகற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

GalleryGalleryGalleryGalleryGallery