டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி சிறிதளவு உயர்வு
திங்கட்கிழமைக்கு ஒப்பிடுகையில், இன்று வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி சிறிதளவு உயர்ந்துள்ளது.
இதன்படி, சில வங்கிகளில் டொலரின் விற்பனை விகிதம் 334 ரூபாயை அண்மித்துள்ளது.
செலான் வங்கியில் டொலரின் கொள்வனவு விகிதம் 326.55 ரூபாயாகவும், விற்பனை விகிதம் 335.80 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
இன்றைய டொலர் பெறுமதி
NDB வங்கியில் கொள்வனவு விகிதம் 326.30 ரூபாயாகவும், விற்பனை விகிதம் 335.30 ரூபாயாகவும் காணப்படுகிறது.

மக்கள் வங்கியில் கொள்வனவு விகிதம் 326.82 ரூபாயாகவும், விற்பனை விகிதம் 334.92 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
கொமர்ஷல் வங்கியில் கொள்வனவு விகிதம் 325.09 ரூபாயாகவும், விற்பனை விகிதம் 335.00 ரூபாயாகவும் மாற்றமின்றி காணப்படுகிறது.
சம்பத் வங்கியில் கொள்வனவு விகிதம் 326.50 ரூபாயாகவும், விற்பனை விகிதம் 334.50 ரூபாயாகவும் குறைந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, பல வர்த்தக வங்கிகளில் டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விகிதங்கள் முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் சிறிதளவு குறைந்துள்ளன.