சம்பூர் பிரதேசத்தில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல்

சம்பூர் பிரதேசத்தில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல்

தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வின் 6வது நாள் நினைவேந்தல் திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பிரதேசத்தில் திங்கட்கிழமை (21) மாலை இடம்பெற்றது.

இதன்போது பிரதான சுடரேற்றப்பட்டு பின்னர் தியாகத் தீபம் திலீபனின் திருஉருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நினைவவேந்தல் நிகழ்வில் பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

GalleryGalleryGalleryGalleryGallery