ஸ்ரீலங்காவிலிருந்து வெளிநாடு சென்றோரின் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றம்

ஸ்ரீலங்காவிலிருந்து வெளிநாடு சென்றோரின் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றம்

தொழில்வாய்ப்பிற்காக ஸ்ரீலங்காவிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்றவர்களின் வீதம் 2019 ஆம் ஆண்டு குறைவடைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழில்வாய்ப்பிற்காக 2018 ஆம் ஆண்டு 2 லட்சத்து 11 ஆயிரத்து 459 பேர் வெளிநாடுகளுக்கு சென்றிருந்தனர்.

எனினும் 2019 ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 2 லட்சத்து 3 ஆயிரத்து 186 பேர் சென்றுள்ளனர்.

இதற்கமைய, தொழில்வாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்றவர்களின் எண்ணிக்கையானது, 3 தசம் 9 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.