
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் நகரில் இடம்பெற்ற விபத்து- 12 பேர் காயம்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் நகர் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் கெப்ரக வாகனம் ஒன்று சிற்றூர்ந்து ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இதன்போது சிற்றூர்ந்தில் பயணித்த 12 பேர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.