
தனியார் துறை ஊழியர்களின் கோரிக்கையை நிராகரித்தது அரசாங்கம்
கொவிட்-19 காரணமாக தனியார் துறை ஊழியர்களுக்கு அவர்களின் மாத சம்பளத்தின் அரைவாசியையோ அல்லது 14500 ரூபாவையோ வழங்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தை நீடிக்குமாறு தனியார் நிறுவனங்கள் முன்வைத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் தனியார் ஊழியர்கள் தொழில்வாய்ப்புக்களை இழக்க நேரிட்டது.
நிறுவனங்களும் தொழிலாளர்களும் பாதிக்கப்படாத வகையில் அரசாங்கம் பல தீர்மானங்களை முன்னெடுத்தது.
அதன்படி ஊழியர்களுக்கு அவர்களின் மாத சம்பளத்தின் அரைவாசியையோ அல்லது 14500 ரூபாவையோ இம் மாதம் வரை வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.
இந் நிலையில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மாத சம்பளத்தின் அரைவாசி அல்லது 14500 ரூபாவை இம்மாதம் ( செப்டெம்பர் 31 ) வரை நீடிக்க வேண்டும் என நிறுவன உரிமையார்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
எனினும் இக்எகோரிக்கையை கைத்தொழில் அமைச்சு நீராகரித்துள்ளது.
கொவிட் -19 வைரஸ் விவகாரத்தை காரணம் காட்டி ஓரு சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்கப்படும் வசதிகளையும் இரத்து செய்துள்ளன. ஊழியர்கள் தங்களின் சொந்த செலவில் இத் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்கிறார்கள்.
இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தொழிற் திணைக்களத்துக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இருப்பினும் முறைப்பாடுகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாமை அதிருப்தியளிப்பதாகவும் கைத்தொழில் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கொவிட்- 19 வைரஸ் பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள்கொண்டு வரப்பட்டுள்ளன. தொழிற்துறைகளும் ஒப்பீட்டளவில் வழங்கப்பட்டுள்ளது.
கைத்தொழில் துறையினை வலுப்படுத்த நிறுவனங்களுக்கு அரசாங்கம் பல சலுகைகள்இ வரிகுறைப்பு ஆகியவற்றை வழங்கியுள்ளது. ஆகவே முதலாளிமார் முன்வைத்துள்ள கோரிக்கைகளை ஏற்க முடியாது என கைத்தொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.