பேருந்து, முச்சக்கர வண்டி, உந்துருளி சாரதிகளுக்கான அதிவிசேட தகவல்..!

பேருந்து, முச்சக்கர வண்டி, உந்துருளி சாரதிகளுக்கான அதிவிசேட தகவல்..!

முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளிகள் பேருந்து முன்னுரிமை பாதையில் பயணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டால் பேருந்து முன்னுரிமை பாதை திட்டத்திலிருந்து விலகிக்கொள்வதாக தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் பாதை விதிமுறைகளின் கீழ் நாளை முதல் பேருந்து, முச்சக்கர வண்டி, மற்றும் உந்துருளி ஆகியன பேருந்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள முன்னுரிமை பாதையினூடாகவே பயணிக்க முடியும் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் கொழும்பு நகரில் தற்போது நடைமுறையிலுள்ள ஒத்திகை காலத்தின் பின்னர் வீதி விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் மேல்மாகாண சிரேஷ்ட்ட பிரதி காவல் துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.