
உலகளவில் கொவிட்-19 தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 மில்லியனை நெருங்குகிறது!
கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றால் உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 மில்லியனை அண்மிக்கின்றது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, 39 இலட்சத்து 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
அதேவேளை, 77 இலட்சத்து 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கொடிய கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால் 4 இலட்சத்து 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றால் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்ட நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.
அங்கு இதுவரை வைரஸ் தொற்றினால் 21 இலட்சத்து 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். 1 இலட்சத்து 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக முறையே பிரேஸில், ரஷ்யா, இந்தியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் உள்ளன.