
கலிபோர்னியாவில் மழை – காட்டுத் தீயை அணைப்பதில் முன்னேற்றம்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பெய்துவரும் லேசான மழை காரணமாக காட்டுத் தீயை அணைப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கலிபோர்னியாவில் பற்றிய காட்டுத் தீ ஒரேகான், வொஷிங்டன் வரை தீ பரவியுள்ளதுடன் இதன் பாதிப்பு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா வரை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பற்றி எரியும் பெருந்தீயைக் கட்டுப்படுத்த 19 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு உதவியாக ஹெலிகாப்டர்களும் நெருப்பை அணைத்து வருகின்றன.
இந்த நிலையில் 27 இடங்களில் ஏற்பட்ட தீயில் 22 இடங்களை அணைத்து விட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவ்வப்போது காலநிலையும், மழையும் பெய்வதால் இது சாத்தியமானதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.