
வார்னர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு: சென்னை அணியில் மூன்று மாற்றங்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. சென்னை அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
எம்எஸ் டோனி, டேவிட் வார்னர்
ஐபிஎல் தொடரின் 14-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்கான டாஸ் 7 மணிக்கு சுண்டப்பட்டது. ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
சென்னை அணியில் முரளி விஜய், ஹாசில்வுட், ருத்துராஜ் நீக்கப்பட்டு வெயின் பிராவோ, அம்பதி ராயுடு மற்றும் ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் விவரம்:-
1. வாட்சன், 2. டு பிளிஸ்சிஸ், 3. அம்பதி ராயுடு, 4. கேதர் ஜாதவ், 5. எம்எஸ் டோனி, 6. சாம் கர்ரன், 7. ஜடேஜா, 8. பியூஷ் சாவ்லா, 9. தீபக் சாஹர், 10. ஷர்துல் தாகூர், 11. வெயின் பிராவோ.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விவரம்:-
1. டேவிட் வார்னர், 2. பேர்ஸ்டோவ், 3. கேன் வில்லியம்சன், 4. மணிஷ் பாண்டே, 5. அப்துல் சமாத், 6. அபிஷேக் ஷர்மா, 7. பிரியம் கார்க், 8. ரஷித் கான், 9. புவனேஷ்வர் குமார், 10, கலீல் அகமது, 11. டி. நடராஜன்.