நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 9.6 சதவீதம் சரியும் - உலக வங்கி கணிப்பு

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 9.6 சதவீதம் சரிவடையும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

உலக வங்கி, தனது தெற்கு ஆசிய பொருளாதார நிலவர அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 9.6 சதவீதம் சரிவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பின்னர், உலக வங்கியின் தெற்கு ஆசியாவுக்கான தலைமை பொருளாதார நிபுணர் ஹன்ஸ் டிம்மர் கூறியதாவது:-

இந்தியாவில் நிலைமை, முன்பை விட மோசமாக இருக்கிறது. வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளின் வேகம் குறைந்துள்ளது. ஏராளமானோர் வேலை இழந்துள்ளனர். வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்பவர்களின் எண்ணிக்கை ஓராண்டில் 33 சதவீதம் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.