யாழில் தங்கச் சங்கிலியை களவாடிய மர்மநபர் - தேடும் பொலிஸார்

யாழில் தங்கச் சங்கிலியை களவாடிய மர்மநபர் - தேடும் பொலிஸார்

வீதியால் சென்ற வயோதிப பெண்ணிடமிருந்து 4 பவுண் தங்கச்சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் சுன்னாகம் உடுவில் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருகையில்,

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் வீதியால் சென்ற பெண்ணை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பின் தொடர்ந்துள்ளனர்.

சன நடமாற்றமற்ற பகுதியில் வைத்து குறித்த வயோதிப பெண்ணை தாக்கி அவரிடமிருந்து 4 பவுண் தங்கச்சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வயோதிப பெண் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.