இலங்கையின் சுற்றுலாத்துறைக்காக கைக்கொடுக்கவுள்ள ஐ.நா சபை
கொவிட்-19 நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் சுற்றுலாத்துறையை மீளக்கட்டியெழுப்ப முழுமையான உதவியை வழங்குவதாக ஐக்கிய நாடுகள் சபை உறுதி அளித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருக்கும், சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறைக்கு உதவும் வகையிலான யோசனைகளை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
துறை சார்ந்த பணியாளர்களின் நலனுக்காக சமூகப் பாதுகாப்பு வலைப்பின்னலை உருவாக்குவதற்கும் உதவ முடியும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சங்கர் இதன்போது குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.