நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது..!

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது..!

இலங்கையில் 14 ஆவது கொவிட் 19 மரணம் சம்பவித்துள்ளது.

சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த குளியாப்பிட்டியை சேர்ந்த 50 வயதான பெண் ஒருவரே இவ்வாறு மரணமானதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் மேலும் 50 பேருக்கு இன்று கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்படி, கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்தின் 22 பேருக்கும்இ அவர்களுடன் தொடர்புடைய 22 பேருக்கும்இ பேலியகொடை மீன் சந்தையின் 6 பேருக்கு இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்தை ஐ கடந்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுறுதியானவர்கள் நாட்டின் 13 மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளனர்.

தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அதேநேரம், கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்தில் 15 தொழிற்சாலைகளில் 331 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அங்கு நேற்றைய தினத்தில் மாத்திரம் 17 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதேவேளை, இலங்கை சுங்கத்திணைக்களத்தில் கடமையாற்றும் இரண்டு பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதனால் கொழும்பு துறைமுகத்தின் பொருள் கொள்வனவு நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுங்கபிரிவின் பேச்சாளர்இ மேலதிக சுங்க பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயரட்ன இதனை தெரிவித்தார்.

அதேநேரம், பேலியகொடை புளுகஹ சந்தியில் உள்ள சொகுசு வாகனம் இறக்குமதி செய்யும் நிறுவனத்தின் பணியாளர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.