மரக்கறிகள் இறக்குமதியா....! உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை
விசேட அனுமதி தவிர்ந்து, ஏனைய எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மரக்கறிகள் இறக்குமதி செய்யப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, வானூர்தி சேவை போன்ற சில நிறுவனங்களுக்கு குளிரூட்டப்பட்ட மரக்கறிகளை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதியை தவிர, வேறு எந்த தரப்பினருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பெரும்பாலான காய்கறிகளின் விலை ஒரு கிலோ 500 முதல் 1,000 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பச்சை மிளகாயின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, ஒரு கிலோ பச்சை மிளகாய் 2,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதேவேளை, ஒரு கிலோ கறி மிளகாய் 1,300 ரூபாவிற்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீரற்ற வானிலை, குறைந்த அறுவடை மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவைகளே விலை அதிகரிப்பு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.