விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் - வங்கி கணக்கிற்கு வரும் பணம்
'டித்வா' புயலினால் சேதமடைந்த நெல் மற்றும் ஏனைய பயிர்களுக்கான மானியங்கள் மற்றும் இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் விவசாயத் திணைக்களம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
சூறாவளியால் சேதமடைந்த சோளம், மரக்கறி மற்றும் ஏனைய பயிர்ச் செய்கைகளுக்காக அரசாங்கம் ஒதுக்கிய 38.1 கோடி ரூபாவிற்கும் அதிக நிதி தற்போது விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது.
இந்த நிதியுதவி மொத்தம் 11,081 விவசாயிகளின் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ், 365 சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு 14,423,125 ரூபாவும், 9,668 மரக்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு 330,750,816 ரூபாவும் விசேட நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த விசேட நிவாரணத்தை வழங்குவதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.