
400 மீனவர்களுக்கு PCR பரிசோதனை..!
காலி- ரத்கம பகுதி மீனவர்களுக்கு இன்று PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காலி மீன்பிடி துறைமுகம் உட்பட அதனைச் சூழவுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 400 மீனவர்களுக்கு இவ்வாறு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காலி நகராட்சி சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய காலி நகராட்சி மற்றும் போப்பேபொத்தல பிரதேச சபைகளின் பொது சுகாதார அதிகாரிகளும் இணைந்து இந்த பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
நேற்று (23) இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் 25 பேரும் காலி மீன் பிடி துறைமுகத்திற்கு அண்மித்து ;வசிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.