
வெளிநாட்டிலிருந்து வந்த இந்தியர் இலங்கையில் கைது
பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் சுமார் ரூ. 8 கோடி 50 இலட்சம் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
33 வயதுடைய இந்திய பிரஜையான குறித்த சந்தேகநபர், போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து 8.54 கிலோகிராம் நிறையுடைய ‘குஷ்’ ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
தாய்லாந்திலிருந்து பிரவேசித்த சந்தேகநபர், இந்தியாவுக்கு இந்தப் போதைப்பொருளை கடத்த முயன்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.