இரண்டு மணிநேரம் கூடவுள்ள நாடாளுமன்றம் - அனுமதி மட்டுப்படுத்தப்பட்டது

இரண்டு மணிநேரம் கூடவுள்ள நாடாளுமன்றம் - அனுமதி மட்டுப்படுத்தப்பட்டது

நாடாளுமன்றம் நாளையதினம்(03) இரண்டு மணிநேரம் மட்டுமே கூடும் என நாடளுமன்ற பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மட்டுமே நாடாளுமன்றம் கூடும் என்றும் இதன்போது சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் இரண்டு விதிமுறைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் வேளை நாடாளுமன்ற உறுப்பினர்கள், அழைக்கப்பட்ட உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தவிர வேறு எவருக்கும் நாடாளுமன்றத்திற்குள் உட்செல்ல அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.