
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்!
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
அதன்படி, தங்கத்தின் விலையானது நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (09) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்தநிலையில், இன்றையதினம்(9) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 995,559 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 35,120 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 280,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 32,200 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 257,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 30,730 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 245,850 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.