இலங்கையில் 15 வயது சிறுவன் ஒருவனுக்கு எச்.ஐ.வி தொற்று

இலங்கையில் 15 வயது சிறுவன் ஒருவனுக்கு எச்.ஐ.வி தொற்று

இலங்கையில் 15 வயது சிறுவன் ஒருவனுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் வேதனையான விடயமாகும் என பதுளை பொலிஸ் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.டபிள்யூ.பி.எஸ். பாலிபன தெரிவித்துள்ளார்.

உலக தோல் சுகாதார தினத்தை முன்னிட்டு பதுளை போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற கருத்தரங்கிலெயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் 15 வயது சிறுவன் ஒருவனுக்கு எச்.ஐ.வி தொற்று | A 15 Year Old Boy Is Infected With Hiv Lanka

சிறுவர்கள் மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக கூறி விட்டு காட்டுக்குள் சென்று வெவ்வேறு நபர்களுடன் கூடி பழகி நாளை கழித்து வந்துள்ளனர்.

இந்நிலையிலேயே, 15 வயது சிறுவனுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

16 வயதுக்குட்பட்ட சிறுவனை அவனின் சம்மதத்துடனும் பாலியல் துஷ்பிரயோகம் செய்வது சட்டவிரோதமானது.

பதுளை மாவட்டத்தில் உள்ள மகியங்கனையில் உள்ள சொரபொர வெவ எனும் குளம் பகுதியில் சுமார் 15 சிறுவர்கள் சுற்றித்திரிவது பொலிஸாரால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.