பொது மக்களின் வேண்டுகோளுக்கு அமைய வடக்கு ரயில் சேவைகளில் மாற்றம்

பொது மக்களின் வேண்டுகோளுக்கு அமைய வடக்கு ரயில் சேவைகளில் மாற்றம்

பொதுமக்களின் வேண்டுகோளின் பேரில் வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் இயக்க நேரங்கள் திருத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த திருத்தங்கள் கடந்த 7 ஆம் திகதி முதல் தினமும் செயல்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், கடந்த சில வாரங்களாக கொழும்பு கோட்டையில் இருந்து இயக்கப்பட்டு வரும் எண் 4021 கடுகதி ரயில் வேவையை, கல்கிஸ்ஸை ரயில் நிலையத்திலிருந்து தொடங்கவும், காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு இயக்கப்பட்டு வரும் எண் 4022 கடுகதி ரயில் சேவையை, கல்கிஸ்ஸை வரை நீட்டிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

பொது மக்களின் வேண்டுகோளுக்கு அமைய வடக்கு ரயில் சேவைகளில் மாற்றம் | Changes Northern Rail Services Response Demand

அத்துடன் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக, கடந்த சில நாட்களாக கல்கிஸ்ஸை ரயில் நிலையத்திலிருந்து இந்த கடுகதி ரயில் சேவையை தொடங்க முடியவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், நாளை (10) முதல், எண் 4021 கடுகதி ரயில் சேவை, கல்கிஸ்ஸை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பிப்பதற்கும், எண் 4022 கடுகதி ரயில் சேவையை கல்கிஸ்ஸை ரயில் நிலையம் வரை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.