நாடாளுமன்ற பேரவையின் முதலாவது கூட்டம் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்..!

நாடாளுமன்ற பேரவையின் முதலாவது கூட்டம் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில்..!

இருபதாவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட நாடாளுமன்ற பேரவையின் இரண்டாவது கூட்டம் எதிர்வரும் 10ம் திகதி நடைபெறவுள்ளது

அதன் முதலாவது கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் எதிர்க்கட்சித் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

அனைத்து உறுப்பினர்களையும் எதிர்காலத்தில் ஒத்துழைப்புடன் செயற்படுமாறு சபாநாயகர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவினால் அரசியலமைப்பின் 20வது திருத்தத்துக்கு அமைய நாடாளுமன்ற பேரவையின் சட்டரீதியான கட்டமைப்பு மற்றும் அதன் நடைமுறைகள் என்பன தொடர்பில் இதன்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, எதிர்வரும் 10 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு பேரவை மீண்டும் கூடுவதற்கு தீர்மனிக்கப்பட்டுள்ளது.