டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 7,340 பேருக்கு கொரோனா தொற்று: 96 பேர் பலி

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 7,340 பேருக்கு கொரோனா தொற்று: 96 பேர் பலி

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 7,340 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 96 பேர் பலியாகியுள்ளனர்.

 

 

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் கேரளா மற்றும் டெல்லியில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

 

டெல்லியில் இன்று இரவு நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,340 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

அதேவேளையில் 7,117 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் 96 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை டெல்லியில் 4,82,170 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,30,195 பேர் குணமடைந்துள்ளனர். 7,519 பேர் உயிரிழந்துள்ளனர். 44,456 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.