மேல் மாகாணத்தில் ஆயிரத்து 186 பேர் கைது

மேல் மாகாணத்தில் ஆயிரத்து 186 பேர் கைது

மேல் மாகாணத்தில் இன்று காலை  5 மணி நிறைவுடன் 24 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஆயிரத்து 186 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண சிரேஸ்ட பிரதி காவற்துறை மா அதிபர் சேதபந்து தென்னக்கோனின் ஆலோசனைக்கமைய இவ்வாறு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 291 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.