டக்ளஸ் தேவானந்தாவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

டக்ளஸ் தேவானந்தாவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பிரிவுக்கு உரித்தான துப்பாக்கியொன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்கமைய அவர் கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

டக்ளஸ் தேவானந்தாவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு | Court Issues Strong Order Against Douglas

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த 26ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.

2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.