இரு குழுக்களுக்கிடையிலான மோதலில் ஒருவர் பலி
நீர் கொழும்பு - துன்கல்பிட்டிய கெபுன்கொட பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையிலான மோதலில் காயமடைந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு குறித்த மோதல் சம்பவம் ஏற்பட்டுள்ள நிலையில், கூரிய ஆயுத்தினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் 3 பேர் காயமடைந்து நீர் கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. பமுனுகம - கெபுன்கொட பிரதேசத்தினை சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.