முறைக்கேடுகளை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கு மூவரடங்கிய குழு..

முறைக்கேடுகளை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கு மூவரடங்கிய குழு..

நிதி நிறுவனங்கள் மற்றும் குத்தகை நிறுவனங்களில் இடம்பெற்ற முறைக்கேடுகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைளை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டீ.லக்ஸ்மனினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு இன்று கூடவுள்ளது.

மத்திய வங்கியில் இன்று மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

அந்த குழுவின் பிரதானியாக ஜனாதிபதி சட்ட பணிப்பாளர் நாயகம், சட்டத்தரணி ஹரிகுப்தா ரோஹனதீர செயற்படுவதுடன் இலங்கை மத்திய வங்கியின் சட்ட பணிப்பாளர் கே.ஜீ.பீ.சிறிகுமார மற்றும் மத்திய வங்கியில், வங்கியற்ற நிதி நிறுவனங்களை முகாமை செய்யும் பிரிவின் பணிப்பாளர் ஜே.பீ.கம்பலத் அதன் ஏனைய உறுப்பினர்களாகவும் பணியாற்றுகின்றனர்.

கடந்த புதன் கிழமை நியமிக்கப்பட்டுள்ள குறித்த குழுவின் அறிக்கை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வங்கி துறை மற்றும் சட்டத்துறையின் நிபுணர்கள் மற்றும் தொழிற்துறை நிபுணர்களையும் இணைத்துக்கொண்டு இந்த அறிக்கையை தயாரிக்குமாறு மத்திய வங்கி ஆளுநர் குறித்த குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.